சின்னசாமி என்பவர் வீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைத்த செடியில், தற்போது பிரம்ம கமலம் பூத்துள்ளது. தெய்வீக மலராக கருதப்படுவதால், மலருக்கு தீபாராதனை எடுத்து பூஜை செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம், அன்னூர், சேஷாந்தி நகரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது வீட்டில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மலரான பிரம்ம கமலம் மலர்ந்துள்ளது. அபூர்வமாக கருதப்படும் இந்த மலரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாகப் பார்த்துச்சென்றனர்.
பிரம்மனின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றுவது போல இந்த பூவின் அமைப்பு தோற்றமளிப்பதால் இதற்கு பிரம்மகமலம் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த மலர் மாலை 7 மணிக்கு மலர தொடங்கி அதிகாலை 4 மணிக்கு வாடிவிடும்.

மே, ஜூன், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் மட்டுமே பூக்கும் இந்த மலரில் மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று ஆண்டுகள் முன்பு வைத்த செடியில், தற்போது பூ பூத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று நெகிழ்ச்சி பட தெரிவித்தனர் சின்னசாமியின் குடும்பத்தார்.

அதிர்ஷ்ட மற்றும் தெய்வீக மலராக கருதப்படுவதால், பிரம்ம கமலம் மலருக்கு தீப ஆராதனை எடுத்து பூஜை செய்தனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பலரும் வந்து பிரம்ம கமலம் மலரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.