தேர்தல் பிரிவில் துணை வட்டாட்சியராக வேல்முருகன் என்பவரும், கிணத்துக்கடவு மண்டல துணை வட்டாட்சியராக ராமராஜ் என்பவரும் பொறுப்பேற்றுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் துணை வட்டாட்சியராக வேல்முருகன் என்பவரும், கிணத்துக்கடவு மண்டல துணை வட்டாட்சியராக ராமராஜ் என்பவரும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துணை வட்டாட்சியர்களின் அறிமுக கூட்டம் இன்று தாலுக்கா வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை வட்டாட்சியர்களை அறிமுகப்படுத்தி வட்டாட்சியர் சசிரேகா பேசினார்.
பின்னர், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தேர்தல் பணிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணை வட்டாட்சியர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த அறிமுகக் கூட்டத்தில், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.