ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரூ.1 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்; திருப்பதியைச்சேர்ந்த ஒருவரை கைது செய்த ரயில்வே பறக்கும்படை!

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு கடத்திச்சென்ற 1 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை ரயில்வே பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்ததோடு ஆந்திராவைத்சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.


கோவை: தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்குப் போதைப்பொருள்கள் ரயில்கள் மூலம் கடத்தப்படுவதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரயில்வே கூடுதல் இயக்குனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, ரயில்வே காவல் துறைத் தலைவர் கல்பனா நாயக், ரயில்வே காவல்துறை துணைத்தலைவர் ஜெய கவுரி அறிவுரையின்படி, காவல் கண்காணிப்பாளர் ரயில்வே சென்னை இளங்கோ மேற்பார்வையில், நான்கு உட்கோட்ட கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், தலைமையில் காவல்துறையினர் ரயில்வே காவலர்கள் 23 குழுக்களாகப் பிரிந்து, சென்னை மற்றும் மற்ற பகுதிகளுக்கு ஆயுதம் மற்றும் பணம் எடுத்துச் செல்கிறார்களா? என்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தான் நேற்று இரவு (வண்டி எண் 06219 )சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் வண்டியை ஜோலார்பேட்டை காவல் நிலைய தனிப்படையினர் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை மேற்கொண்டனர்.



அதில் D2 கோச் 24 பிரிவில் திருப்பதியைச் சேர்ந்த 43 வயதான ரஜினி குமார்ப, என்பவருடைய உடமைகளைப் பரிசோதனை செய்ததில் ஹான்ஸ் கூளிப், குட்கா, பான்பராக் உட்பட மொத்த பாக்கெட்டுகள் 17 ஆயிரத்து 915, அதன் மொத்த எடை 42 கிலோ, எடை கொண்டதோடு இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சம் மதிப்பில் இருந்தது. இதனையடுத்து போதைப்பொருள்களை பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்த நபரை ரயில்வே போலீசார் திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அதிகாரி வசம் அவரை ஒப்படைத்தனர்.

மேலும் சிறப்பாக செயல்பட்டு போதைப்பொருள்களை கடத்தியவர்களை கைது செய்த தனிப்படையினரை, ரயில்வே கூடுதல் இயக்குனர் அமலாக்கத்துறை சந்திப்ராய் ரத்தோர் பாராட்டினார். மேலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் 1512 இலவச அழைப்பு மற்றும் 9962 500 500 என்ற மொபைல் எண்ணிற்கு எந்த தகவல்களையும், புகார்களையும் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...