உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதரவற்ற முதியோர்களை ஈஷா மையத்திற்கு அழைத்துச்சென்ற மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள்.
கோவை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்த விழாவைச் சிறப்பிக்கும் விதமாக மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தாண்டு கோவை மாவட்ட சுற்றுலாத் துறையும், ஸ்கால் இளப்பும் இணைந்து உலக சுற்றுலா தினத்தைக் கொண்டாட முடிவு எடுத்தனர். அதன்படி இன்று கோவையில் உள்ள அரசு ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிக்கும் சுமார் 60 பேரை கோவையில் உள்ள முக்கிய ஆன்மீக தளமான ஈஷாவிற்கு அழைத்து வந்தனர்.

தற்போது கோவையில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் உலக சுற்றுலா தினத்தைக் கொண்டாட வந்த ஆதரவற்ற முதியவர்கள் இன்றைய காலைப்பொழுதை இனிமையாக்கியதோடு, ஆதியோகியையும் கண் குளிர ரசித்தனர்.பின்னர் ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியையும் தரிசனம் செய்தனர்.