வால்பாறையில் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் தமிழக அரசு அறிவித்துள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புதிய சம்பளம் குறித்தும் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
வால்பாறை: வால்பாறை தோட்டத் தொழிலாளர் சம்பளம் குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் தமிழக அரசு அறிவித்துள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புதிய சம்பளம் குறித்தும் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியாக 425-ரூபாய் 40-பைசா அறிவித்துள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் முடிவுற்றது.
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அரசின் புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்வு அரசாணை வெளியிடும் வரை ரூபாய் 395-க்கு இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 01.07.21-முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய ஆலோசனைக் கூட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் நடைபெற்றது. எல்பி எஃப் தொழிற்சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அரசு ஆணை பிறப்பிக்கும் வரை சம்பளம் தொடர்பான எந்த ஒரு ஒப்பந்தமும் தோட்ட அதிபர்களுடன் ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தத் திட்டம் இல்லை என்றும் தொழிலாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் எல்பிஎஃப் வினோத்குமார், செந்தில், ஐ.என்.டி.யூ.சி.யூ கருப்பையா, ஏஐடியூசி மோகன் ராமகிருஷ்ணன், எல்எல்எப்.கேசவ மருகன், வீரமணி, எச்எம்எஸ்.மாணிக்கம், சிஐடியூ.பரமசிவம், எம்எல்எப் கல்யாணி, தங்கவேல், மாணிக்கம், வர்கீஸ், தர்மராஜ் உட்பட ஏராளமான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.