மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்: மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் வேளான் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக எல்.பி.எப், சிஐடியு ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பலத்த காவல்துறை போடப்பட்டதையடுத்து ரயில் நிலைய வாசலிலேயே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பினர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.