ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அன்னூரில் சிக்கிய ரூ.8-லட்சம்.. தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாகன சோதனையில் அன்னூரில் கணக்கில் வராத 8-லட்ச ரூபாய் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாகன சோதனையில் கணக்கில் வராத 8-லட்ச ரூபாய் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

தமிழகத்தில் 8-மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவை அன்னூர் பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை பறக்கும் படையினர் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் 8-லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அந்த உரிமையாளரிடம் அந்தப் பணம் குறித்துக் கேட்ட போது அதற்கான தக்க ஆவணம் அவரிடம் கிடையாது.

அதனால் தேர்தல் பறக்கும் படையினர் 8-லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாகனத்தில் பணம் கொண்டு வந்த நபரிடம் இதற்கான முறையான கணக்கு மற்றும் ஆவணத்தைக் காட்டிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறி அனுப்பினர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....