வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 15,000-ரூபாயும் இரண்டாவது பரிசாக 10,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 5,000-ரூபாயும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
திருப்பூர்: திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற்ற கால் பந்தாட்ட போட்டியில் திருப்பூர் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையிலும் கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியைஊக்குவிக்கும் விதமாகவும் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஐவர் அணி கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியை, முன்னாள் திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் கேரள மாநிலம், கோவை, திருப்பூர், திருச்செங்கோடு, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 36-அணிகள் பங்கேற்று விளையாடினர்.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று பல்லடம்- திருப்பூர் அணியும் மற்றொரு பிரிவில் பாலக்காடு-திருச்சூர் அணியும் மோதியது. இதில் திருப்பூர் மற்றும்திருச்சூர் அணிகள்இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று விளையாடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-0 புள்ளி என்ற கோல் கணக்கில் திருச்சூர் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது.
வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 15,000-ரூபாயும் இரண்டாவது பரிசாக 10,000 ரூபாயும்மூன்றாவது பரிசாக 5,000-ரூபாயும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.