கோவையில் தொடரும் கொள்ளை சம்பவம்; டெய்லர் வீட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 3.22 லட்சம் ரொக்கம் கொள்ளை..!

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் படிந்து உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் டெய்லர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூபாய் 3.22 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முபாரக் அலி (48), இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கரும்பு கடையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.



பின்னர், நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 



உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த உடமைகள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ. 3.22 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முபாரக் அலி இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர்.

இதனிடையே, தற்சமயம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் படிந்து உள்ளதா? என போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கோவை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....