7 வருட தொடர் முயற்சியால் ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் முதல் இடம் பிடித்த கோவை மாணவன்..! குவியும் பாராட்டுகள்.!!

கோவையைச் சேர்ந்த மாணவன் நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33வது இடத்தையும், தமிழகத்தின் முதல் இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.


கோவை: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவில் தமிழக அளவில் கோவை மாணவன் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

கோவையைச் சேர்ந்த மாணவன் நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33 வது இடத்தையும், தமிழகத்தின் முதல் இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இதுகுறித்து நாராயண சர்மா கூறுகையில்:-

எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், அப்பா வெங்கடேஸ்வரா சர்மா, கோவையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜென்டாக உள்ளார்.

அம்மா சுஜாதாவும் இன்சூரன்ஸ் ஏஜென்ட் தான். நான் ஒரே மகன் கோவை கணுவாய் அஜந்தா நகரில் குடும்பத்துடன் வசிக்கிறோம்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் ஈஸிஇ படித்துள்ளேன். 2017 -ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன் கல்லூரியில் படிக்கும்போதே 2014 -ஆம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ், தேர்வு எழுத பயிற்சி பெற்று 2018 -ம் ஆண்டு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றேன்.

அடுத்த ஆண்டு மெயின் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வு சென்றேன். தற்போது 3-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.

தொடர்ந்து ஏழு வருடங்களாக நான் செய்த முயற்சிக்கும் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறினார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....