கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்

கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்க்குள் ஆம்புலன்ஸ் எரிந்து நாசமாகியது.


கோவை: கோவையின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பிணவறை உள்ளது. சற்றுமுன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பிண அறை உள்ளது. இதில், பிணங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நிற்பது வழக்கம். இன்று சரியாக 10 மணி அளவில் திடீரென ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு இரண்டு அரசு அமரர் ஊர்திகள் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது.



இரவு நேரம் என்பதால் அந்தப் பகுதிகள் ஆட்கள் யாரும் இல்லாததால், தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிவதைப் பார்த்த சேரன் டவர் பகுதியில் சென்று கொண்டிருந்த நபர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்சை அணைத்து உள்ளனர்.



ஆனால், அவர்கள் அங்கு வருவதற்குள்ளாக 2 ஆம்புலன்சும் எரிந்து நாசமாகியது.



அதிலிருந்த, ஓட்டுனர்கள் நிறுத்திவிட்டு அவர்களுடைய அறைக்கு தூங்கச் சென்றதால் இந்த பகுதியில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....