வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் உள்ளதாகவும் அதன்பிறகு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்ட உள்ளாட்சி இடைதேர்தலில் போட்டியிட தாக்கல் செய்தவர்களின் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி உள்பட காலியாக உள்ள 16 உள்ளாட்சி இடங்களுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 21 பேர் உள்பட மொத்தம் 94 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்த வேட்பு மனுக்களின் பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 2 பேரின் வேட்பு மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 92 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்த நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 63 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 9 மனுக்களும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 20 மனுக்கள் என மொத்தம் 92 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதல் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.