ஆண்டறிக்கையில் தணிக்கையாளர் செய்த தவறு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க 1-லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி அலுவலர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கோவையில் பரபரப்பு.
கோவை: கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகி தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நபர் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கோயம்புத்தூர் பிரிவு அலுவலகத்தை அணுகித் தான் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நிறுவனத்தின் மீது 2014 /2015 ஆம் ஆண்டு அறிக்கையில் தணிக்கையாளர் செய்த தவறு தொடர்பாக வணிகவரித் துறை தன் நிறுவனத்தின் மீது ரூபாய் 15 லட்சத்து 73 ஆயிரத்து 192 அபராதம் விதிக்காமல் இருக்க விவேகானந்தன் வணிகவரி அலுவலர் ஆவாரம் பாளையம் தாலுகா கோயம்புத்தூரைச் சேர்ந்த அவர் தனக்கு 1 லட்சம் லஞ்சம் முன் பணமாகக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டதாகவும், அதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அவரிடம் 1 லட்ச ரூபாய் கொடுத்து அதிகாரிகளுடன் சென்றனர். புகார்தாரர் விவேகானந்தரிடம் 1 லட்சம் கொடுக்கும்பொழுது லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.