கோவை மாநகராட்சியில் ரூ.30 கோடி திட்ட பணிகள் ரத்து.!!

கோவை மாநகரில் சாலைகள் சீரமைப்பு, பூங்கா பராமரிப்பு உள்பட கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் ரூ.30-கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்ட, கோரப்படாத பணிகள் மற்றும் துவங்கப்படாத 152-பணிகள், மாநகராட்சியின் தற்போதைய நிதிநிலையைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் நிதி நெருக்கடி காரணமாக ரூ.30-கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தீர்மானங்களில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 86-வது வார்டில் உள்ள சில்லறை மீன் மார்க்கெட்டில் கழிப்பிடம் அமைத்தல், 98-வது வார்டு, மாரியப்ப கோனார் வீதியில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல், 97-வது வார்டு, மோகன் நகர், 100-வது வார்டு ஈச்சனாரி பிரதான சாலையில் மெட்டல் சாலைகள் அமைத்தல், 59-வது வார்டு எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலணியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 2-ஆம் தளம் அமைத்தல், 34-வது வார்டு, வீரியம்பாளையம் ஆரம்பப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், 32-வது வார்டு, விளாங்குறிச்சி சாலை முதல் விஸ்வாசபுரம் வரையுள்ள கால்வாயில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூர்வாருதல், திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் மாநகரில் சாலைகள் சீரமைப்பு, பூங்கா பராமரிப்பு உள்பட கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் ரூ.30-கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்ட, கோரப்படாத பணிகள் மற்றும் துவங்கப்படாத 152-பணிகள், மாநகராட்சியின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...