திருப்பூரில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நஞ்சுராயன் குளம் சுமார் 440 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தை சுற்றி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் பல்லுயிர்க்கும் மரங்களை வளர்க்கும் விதமாகவும் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக சுமார் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன் முன்னோட்டமாக இன்று நஞ்சராயன் குளம் அருகே திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் இளைஞர் அணி சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
வேம்பு, புளிய மரம், புஞ்சை மரம் என பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.