புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கோவை மாநகராட்சி 32வது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என மக்கள் விரோத ஒன்றிய பாஜக மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவை மாநகராட்சி 32வது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3 வேளாண் விரோத கருப்பு சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என நாட்டை வரலாறு காணாத சீரழிவில் தள்ளியிருக்கும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவை மாநகராட்சி 32 ஆவது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி 32வது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக திமுக வட்ட செயலாளர் மயில்சாமி அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் GV நவீன் குமார் முன்னிலை வகித்தார். திமுக நிர்வாகிகள் சசிரேகா அரங்கசாமி, திலீப், சம்பத், அருண், காங்கிரஸ் கட்சி வட்டத் தலைவர் கோபால், மாவட்டச் செயலாளர் சாமுவேல் தாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், சுரேஷ், தினேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சம்பத், பிரதீப், மோகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் அய்யாசாமி, கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...