மாநகராட்சியில் 266-இடங்களில் தடுப்பூசி முகாம் நடைப்பெற்று வருவதாகவும், தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி முகாமிற்குச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்.
கோவை: கோவை மாநகராட்சியில் இன்று 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் 266- கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
கோவை மாநகராட்சியில் இன்று 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் 266 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் வடக்கு மண்டலம் பயனீர் மில் ரோடு, பீளமேடு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம்.
கிழக்கு மண்டலம் வார்டு எண் 67 இராமகிருஷ்ணா புரம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. தெற்கு மண்டலம் வார்டு எண் 77, சொர்க்கம்புதூர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி. வார்டு எண் 80 ம.ந.க. வீதி அருள்மிகு ஸ்ரீ வெங்கிடரமண சுவாமி பஜனை மடாலய உற்சவகூடம்.

மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி முகாமிற்குச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி தங்களை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.