கோவையில் 266-இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்.!!

மாநகராட்சியில் 266-இடங்களில் தடுப்பூசி முகாம் நடைப்பெற்று வருவதாகவும், தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி முகாமிற்குச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்.


கோவை: கோவை மாநகராட்சியில் இன்று 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் 266- கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது.

கோவை மாநகராட்சியில் இன்று 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் 266 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் வடக்கு மண்டலம் பயனீர் மில் ரோடு, பீளமேடு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம்.

கிழக்கு மண்டலம் வார்டு எண் 67 இராமகிருஷ்ணா புரம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. தெற்கு மண்டலம் வார்டு எண் 77, சொர்க்கம்புதூர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி. வார்டு எண் 80 ம.ந.க. வீதி அருள்மிகு ஸ்ரீ வெங்கிடரமண சுவாமி பஜனை மடாலய உற்சவ‌கூடம்.



மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலை, பேருந்து நிலையம் ‌ஆகிய‌‌ இடங்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி முகாமிற்குச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி தங்களை கொரோனா‌ நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...