கடந்த ஒரு வாரமாக கோவை கோட்டம் அரசு பேருந்து சார்பாக கோவை டவுன் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கும் 10.45 மணிக்கும் இரண்டு பேருந்துகள் மதுரைக்கு நேரடியாக செல்கிறது.
கோவை: எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், வார கடைசி நாட்களில் கூடுதல் பரபரப்பாக காணப்படும். பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் டவுன் பேருந்து நிலையத்தில் கூடுவதும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடியவர்கள், கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சிங்காநல்லூர் செல்ல பேருந்து பிடித்து அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கொரோனா தளர்வுகளுக்கு பின், வெள்ளி மாலை விடுமுறையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு வரப்பிரசாதமாக, கடந்த ஒரு வாரமாக கோவை கோட்டம் அரசு பேருந்து சார்பாக கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கும் 10.45 மணிக்கும் இரண்டு பேருந்துகள் மதுரைக்கு நேரடியாக இயக்கப்படுகிறது. இந்த இரண்டு பேருந்துகளும் பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள்.
கோவையில் இருந்து சரியாக 10 மணிக்கு புறப்படும் பேருந்து 3 மணி அளவில் மதுரை ஆரப்பாளையம் சென்றடையும்.
ஆதலால், இனிதென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கையில் கனத்த பேக்குகளை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு பேருந்து நிலையமாக அலையாமல் கோவை காந்திபுரம் வந்துவிட்டால் டவுன் பேருந்து நிலையத்துக்குள் இருந்து மதுரைக்கு இலகுவாக செல்லலாம்.
இந்த கூடுதல் பேருந்து சேவையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.