காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு மதுரைக்கு 2 அரசுப் பேருந்துகள் இயக்கம்.

கடந்த ஒரு வாரமாக கோவை கோட்டம் அரசு பேருந்து சார்பாக கோவை டவுன் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கும் 10.45 மணிக்கும் இரண்டு பேருந்துகள் மதுரைக்கு நேரடியாக செல்கிறது.


கோவை: எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், வார கடைசி நாட்களில் கூடுதல் பரபரப்பாக காணப்படும். பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் டவுன் பேருந்து நிலையத்தில் கூடுவதும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடியவர்கள், கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சிங்காநல்லூர் செல்ல பேருந்து பிடித்து அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். 

இந்த நிலையில், கொரோனா தளர்வுகளுக்கு பின், வெள்ளி மாலை விடுமுறையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு வரப்பிரசாதமாக, கடந்த ஒரு வாரமாக கோவை கோட்டம் அரசு பேருந்து சார்பாக கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கும் 10.45 மணிக்கும் இரண்டு பேருந்துகள் மதுரைக்கு நேரடியாக இயக்கப்படுகிறது. இந்த இரண்டு பேருந்துகளும் பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள். 

கோவையில் இருந்து சரியாக 10 மணிக்கு புறப்படும் பேருந்து 3 மணி அளவில் மதுரை ஆரப்பாளையம் சென்றடையும். 

ஆதலால், இனிதென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கையில் கனத்த பேக்குகளை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு பேருந்து நிலையமாக அலையாமல் கோவை காந்திபுரம் வந்துவிட்டால் டவுன் பேருந்து நிலையத்துக்குள் இருந்து மதுரைக்கு இலகுவாக செல்லலாம். 

இந்த கூடுதல் பேருந்து சேவையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...