பல ஆண்டுகள் பணிபுரிந்து சாதனை படைத்த அனைத்து வீரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
கோவை: கோவை ஐ.என்.எஸ் அக்ரானி 1965ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தொடங்கப்பட்டது. அக்ரானி கடற்படையின் முதன்மையான பயிற்சி நிறுவனமாகும். அதன் தொடக்கத்திலிருந்து, ஐ.என்.எஸ் அக்ரானி கடற்படையின் மூத்த மாலுமிகளுக்கு தரமான தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சியை வழங்கி வருகிறது.
மூத்த மாலுமிகள் ஒரு வலுவான கடற்படையின் அடித்தளத்தை உருவாக்குகிறார்கள் மற்றும் இவர்களை சீர்படுத்துவதிலும் தலைவராக மாற்றுவதிலும் ஐ.என்.எஸ் அக்ரானி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பயிற்சி அவர்களை கரை மற்றும் மிதக்கும் உயர் பொறுப்புகளையும், முக்கிய பொறுப்புகளையும் சுமக்க உதவுகிறது.
இந்த நிலையில், இன்று கடற்படை மற்றும் தேசத்திற்கு ஒரே மாதிரியான 56 ஆண்டுகால நட்சத்திர சிறப்பை நினைவுகூறும் வகையில் பிரிவின் கட்டளை அதிகாரி சி.எம்.டி அசோக் ராய் வி.எஸ்.எம் அவர்களால் ஆண்டுவிழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் போது ஆண்டுகள் பல பணிபுரிந்து சாதனைப் படைத்த அனைத்து வீரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இத்தகைய பெருமை பொருந்திய ஆண்களும், பெண்களும் தேசத்துக்கும் கடற்படைக்கும் தங்கள் சேவையை இடைவிடாது உறுதியுடனும் சீரிய செயல்களுடனும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.