கோவையில் கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!

கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் உத்தரவின் பேரில், கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் உத்தரவின் பேரில், கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை கணபதி சங்கனூர் மெயின் ரோடு காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் ரங்கநாதன் என்பவருடைய மகன் தினேஷ்(27), இவர் கடந்த 2020-ம் ஆண்டு கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கோவில்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், துடியலூர் காவல் நிலையம் சார்பாக மாவட்ட எஸ்.பி செல்வனாக ரத்தினத்திற்கு தினேஷ் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் தினேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டு அதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் உள்ள கைதியிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...