கோவையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுவதாக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை புளியகுளத்தில் உள்ள சாரதா திருமண மஹாலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை கூட்டம் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.



இந்த முகாமில் புலியகுளம் மற்றும் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனை பெற்றனர். மருத்துவ ஆலோசனைக்கு பின் அறுவை சிகிச்சைக்கான தேவை இருப்பவர்களுக்கு பாரத பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை பாஜக மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு தேவையுள்ள பெண்களுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



பெண்களுக்கு தங்கள் உடல் நலம் குறித்து ஆலோசனை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் குடியிருப்புகள் அருகில் முகாம்கள் அமைத்து ஆலோசனை வழங்கி வருகின்றோம். இந்த செயல்ளுக்கு பெண்கள் மத்தியில் வரவேறுப்பு கிடைத்துள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் முதன்மை இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, மது பழக்கம் உடைய ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...