மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பணிகள் செய்யும் முறை, அதைக்கையாளும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவம் பற்றிய பயிற்சி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிற்கிணங்க வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் மகளிர் ஒருங்கிணைப்பாளர் வாசுகி முன்னிலையில் சுகாதார நிலைய அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பணிகள் செய்யும் முறை, அதைக்கையாளும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அதற்கான பயிற்சியும் சுகாதார நிலைய மருத்துவர் மனோஜ் மற்றும் நோய்த்தொற்று பிரிவு செவிலியர் இளவரசி ஆகியோர்களால் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.