வால்பாறையில் திமுகவினர் சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்.. பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய கட்சியினர்!

தந்தைப்பெரியாரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வால்பாறையில் திமுக கட்சியினர் சார்பாக, பெரியார் திருவுருப படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், பெண் கல்வி, பெண் சுதந்திரம், சுய மரியாதைக் கிடைப்பதற்கு என பல்வேறு எழுச்சிக்களை ஏற்படுத்திய தந்தைப்பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.

சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடிய பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி தன்னுடைய 95 வயதில் காலமானார். தன்னுடைய கடைசி காலம் வரை திராவிடக்கொள்கையோடு வாழ்ந்து வந்த பெருமைக்குரியவராக விளங்கினார் பெரியார். எனவே இவரை கௌரவிக்கும் விதமாக பெரியாரின் 143 வது பிறந்த தினம் சமூக நீதி நாளாகக்கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் சமூக நீதிக்கான உறுதிமொழி ஏற்று பெரியார் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, வால்பாறையில் திமுக கட்சியின் சார்பில் பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பெரியாரின் சிறப்பினை பற்றிய சிறப்புரை ஆற்றியதோடு, அங்குள்ள மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக பெரியாரின் பிறந்த தினத்தைக்கொண்டாடினர்.



இந்த விழாவில் வால்பாறை திமுக பொறுப்பாளர் பால் பாண்டி, திப்பம்பட்டி ஆரிசாமி, ஜே பாஸ்கர், மகுடிஷ்வரன், செந்தில், ஈ கா, பொன்னுசாமி, செல்வம், வடை கடை குட்டி, r k குமார் சேகர் ஆசை தம்பி, ஜெயராமன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...