கோவை: கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த விமல்ராஜ் இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணி புரிந்த மதுராந்தகி கடந்த ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி (நில எடுப்பு) விமல்ராஜ் கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஜூலை 14ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் துணை ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், துணை ஆணையாளர் பதவியில் இருந்து திடீரென்று விடுவிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணிபுரியும் விமல்ராஜ் நிர்வாக காரணங்களுக்காக இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.