வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்..!

வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறையின் மூலம் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


கோவை: வால்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறையின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க கபசுர குடிநீர் வழங்கும் பணிகளையும் நகராட்சி சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, வால்பாறையில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை மாணவர்கள் விரும்பி கேட்டு வாங்கி அருந்தினர்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் பாபு, இளங்கோ, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...