இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் உடனடி நிவாரண தொகை ரூ.50,000 இன்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: கோவை நரசீபுரம் பகுதியில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நரசீபுரம் ஒதுக்குக்காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை சின்னசாமி என்ற விவசாயியை மிதித்ததில் வலது கால் மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை பணியாளர்கள், அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சின்னசாமி உயிரிழந்தார். இதையடுத்து, சின்னசாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, வனப்பணியாளர்கள் ஒற்றை காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் உடனடி நிவாரண தொகை ரூ.50,000/- இன்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.