கோவை நரசீபுரம் பகுதியில் காட்டு யானை மிதித்து விவசாயி பலி..!

இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் உடனடி நிவாரண தொகை ரூ.50,000 இன்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை நரசீபுரம் பகுதியில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசீபுரம் ஒதுக்குக்காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை சின்னசாமி ‌என்ற விவசாயியை மிதித்ததில் வலது கால் மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை பணியாளர்கள், அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சின்னசாமி உயிரிழந்தார். இதையடுத்து, சின்னசாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, வனப்பணியாளர்கள் ஒற்றை காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் உடனடி நிவாரண தொகை ரூ.50,000/- இன்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...