கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


கோவை: தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுந்தராபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



திமுக சார்பில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



இந்த விழாவில் திராவிட கழகம், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...