வால்பாறை நீதிமன்றத்தில் உள்ள வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுவிடம் பொதுமக்கள் அணுகி தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு வழக்கறிஞர் ஆர்.ஆர். பெருமாள் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

இதையடுத்து, முகாமில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய வழக்கறிஞர் விசுவநாதன், தற்போதைய கொரோனா காலத்தில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் தங்களுடைய சட்ட உதவிக்கு வால்பாறை நீதிமன்றத்தில் உள்ள வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுவிடம் அணுகி தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் டி.ஏ. சுரேஷ் நன்றி தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர் ஆர்.ஆர். பெருமாள், எம். முத்துசாமி விஸ்வநாதன் மற்றும் தன்னார்வலர்கள் தாமரைக்கண்ணன், கே முனியாண்டி, டி கே சுரேஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.