வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சம்..!

தேயிலைத் தோட்டத்தின் வழியாக வந்த ஒற்றை காட்டு யானையால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.


கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே தாய் முடி எஸ்டேட் தேயிலைத் தோட்டம் மூன்றாவது பிரிவில் தேயிலைத் தோட்டப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள்.



அப்போது, திடீரென்று அப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தின் வழியாக வந்த ஒற்றை காட்டு யானையை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, அச்சத்துடன் பாதுகாப்பான பகுதிக்குச் சென்றனர். இதனால் சிறிது நேரம் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.



இதையடுத்து, தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். அதன்பின், தேயிலை தோட்டம் பணியை மாற்று தோட்டத்தில் வேலை செய்தனர்.

தேயிலைத் தோட்டத்தின் வழியாக வந்த ஒற்றை காட்டு யானையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...