முதுகு தண்டுவட காயம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் 15 பேர் குடிசை மாற்று வாரிய வீடு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு

முதுகுத் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 15 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்து கலெக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் குடிசை மாற்று வாரியம் மூலம் மானியத்துடன் வீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.


கோவை: முதுகுத் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 15 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்து கலெக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் குடிசை மாற்று வாரியம் மூலம் மானியத்துடன் வீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.

அப்போது முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் கலெக்டர் பரிவோடு குறைகளைக் கேட்டறிந்தார்.

அரசு வழங்கும் மாதாந்திர ஊக்கத் தொகை ரூ.1,500-டன் மாற்றுத்திறனாளிகளை கவனித்துக்கொள்ளும் உதவியாளர்களுக்கென்று 1,000 இணைத்து வழங்க கோரிக்கை வைத்தனர். அதேபோல், அவர்களுக்கு வழங்கிடும் மானிய அடிப்படையிலான வீடு தரை தளத்தில் அமைத்துத் தரவும் கோரிக்கை விடுத்தனர்.



கொரோனா ஊரடங்கு காலத்தில், மிகவும் சிரமப்பட்டு வருவதால், பொருளாதார அடிப்படையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உடனடி வேலைவாய்ப்பை உருவாக்கித்தரவும் கோரிக்கை வைத்தனர்.

அப்போது, பொள்ளாச்சி சப்கலெக்டர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல மைய அலுவலர் வசந்த ராமகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...