பொள்ளாச்சி வழியாக கோவை, திண்டுக்கல் ஊர்களுக்கு மீண்டும் பயணிகள் ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு..!

வரும் அக்டோபர் 1ம் தேதி தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோவை: பொள்ளாச்சி வழியாக கோவை, திண்டுக்கல் ஊர்களுக்கு மீண்டும் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு இரண்டு பயணிகள் ரயில் இயங்கி வந்தது.

கொரோனா முதல் அலை காரணமாக அந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டன. இதனிடையே, இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கத்தை துவங்க வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தெற்கு ரயில்வே ஆறு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் மீண்டும் பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல், கோவைக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேசமயம், ரயில் இயக்கம் துவங்கும் தேதி, நேரம் தெரிவிக்கவில்லை. வரும் அக்.,1ல், தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...