வெளி மாநிலங்களிலிருந்து கோவைக்கு வரும்‌ மாணவ-மாணவிகளுக்கு இரண்டு தவணை கோவிட்‌-19 தடுப்பூசி செலுத்தியிருத்தல்‌ அவசியம்‌ - மாநகராட்சி ஆணையர்

தனிமைப்படுத்தி கொள்ளாமல்‌ மாணவ-மாணவியர்களை நேரடியாக விடுதிகளில்‌ தங்க அனுமதிக்கும்‌ கல்வி நிர்வாகங்கள்‌ மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள்‌ மேற்கொள்வதுடன்‌ அபராதமும்‌ விதிக்கப்படும்‌.



கோவை: வெளி மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் படிக்க வரும்‌ அனைத்து மாணவ-மாணவியர்களும்‌ இரண்டு தவணை கோவிட்‌-19 தடுப்பூசி செலுத்தியிருத்தல்‌ அவசியம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ‌தெரிவித்துள்ளார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ அமைந்துள்ள அனைத்து கலை, அறிவியல்‌, பொறியியல்‌, மருத்துவம்‌ மற்றும்‌ செவிலியர் கல்லூரி விடுதிகளில்‌ வெளி மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் படிக்க வரும்‌ அனைத்து மாணவ-மாணவியர்களும்‌ இரண்டு தவணை கோவிட்‌-19 தடுப்பூசி செலுத்தியிருத்தல்‌ அவசியம்‌.

இந்த மாணவ-மாணவியர்கள்‌ அந்தந்த கல்வி நிர்வாகத்தின்‌ கீழ்‌ அமைந்துள்ள விடுதிகளில்‌ வருகை புரிந்தவுடன்‌ இரண்டு தவணை கோவிட்‌-19 தடுப்பூசி செலுத்தியிருப்பினும்‌ குறைந்தபட்சம்‌ ஒருவாரம்‌ (10-நாட்கள்‌) விடுதிகளில்‌ மத்திய மாநில அரசுகளின்‌ கோவிட்‌ 19 தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தி கொள்ளல்‌ வேண்டும்‌.

(10-days quarantine)அவ்வாறு தனிமைப்படுத்தி கொள்ளாமல்‌ மாணவ-மாணவியர்களை நேரடியாக விடுதிகளில்‌ தங்க அனுமதிக்கும்‌ கல்வி நிர்வாகங்கள்‌ மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள்‌ மேற்கொள்வதுடன்‌ அபராதமும்‌ விதிக்கப்படும்‌ என்பதனை தெரிவித்துள்ளது.

மேலும்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ ஒரு தனியார்‌ கல்வி நிறுவனத்தின்‌ தங்கும்‌ விடுதியில்‌ கேரளாவிலிருந்து வந்து தங்கியிருந்த பல மாணவ-மாணவியர்களுக்குத் தொற்று பரவல்‌ கண்டறியப்பட்டது.

எனவே, கல்லூரி நிர்வாகங்கள்‌ அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும்‌ உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா வைரஸ்‌ தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ‌தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...