தனிமைப்படுத்தி கொள்ளாமல் மாணவ-மாணவியர்களை நேரடியாக விடுதிகளில் தங்க அனுமதிக்கும் கல்வி நிர்வாகங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் அபராதமும் விதிக்கப்படும்.
கோவை: வெளி மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் படிக்க வரும் அனைத்து மாணவ-மாணவியர்களும் இரண்டு தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருத்தல் அவசியம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரி விடுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் படிக்க வரும் அனைத்து மாணவ-மாணவியர்களும் இரண்டு தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருத்தல் அவசியம்.
இந்த மாணவ-மாணவியர்கள் அந்தந்த கல்வி நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள விடுதிகளில் வருகை புரிந்தவுடன் இரண்டு தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருப்பினும் குறைந்தபட்சம் ஒருவாரம் (10-நாட்கள்) விடுதிகளில் மத்திய மாநில அரசுகளின் கோவிட் 19 தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தி கொள்ளல் வேண்டும்.
(10-days quarantine)அவ்வாறு தனிமைப்படுத்தி கொள்ளாமல் மாணவ-மாணவியர்களை நேரடியாக விடுதிகளில் தங்க அனுமதிக்கும் கல்வி நிர்வாகங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்பதனை தெரிவித்துள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் தங்கும் விடுதியில் கேரளாவிலிருந்து வந்து தங்கியிருந்த பல மாணவ-மாணவியர்களுக்குத் தொற்று பரவல் கண்டறியப்பட்டது.
எனவே, கல்லூரி நிர்வாகங்கள் அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.