கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு சரியான முறையில் தகவல் செல்லாததால் கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலியால் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.
அதன்படி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெ.10 முத்தூர் ஊராட்சியில் காலியாக உள்ள 2வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்த ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு சரியான முறையில் தகவல் செல்லாததால் வழக்கம் போல் இன்று கூட்டத்திற்கு கலந்துகொள்ள வந்த உறுப்பினர்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.