திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே உள்ள வாளவாடி கிராமத்தில் மீண்டும் பணி வழங்கக்கோரி வருவாய்த்துறை ஊழியர் திலீப் குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள வாளவாடி கிராமத்தில் திலீப் குமார் என்பவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் பிரதமர் குறித்து பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டதாக பாஜகவினர் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் இவரை பணியிடை நீக்கம் செய்தது, வருவாய்த்துறை ஒரு சிறிய பிரச்சனைக்காக ஓராண்டுக்கு மேலாகப் பணி வழங்காமல் இழுத்தடிப்பது என வருவாய் துறையினர் மீது இவர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தனக்குப் பணி வழங்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.