கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள குஞ்சி பாளையத்தில் குடிபோதையில் தகராற்றில் ஈடுபட்ட இளைஞரைக் கம்பியால் தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 10-ஆம் தேதி பொள்ளாச்சி அருகேயுள்ளகுஞ்சி பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் வாகன விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்து இருப்பதாக மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று படுகாயமடைந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 10-ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து உயிரிழந்தவரின் உறவினர்களிடம் விசாரித்த போது கடந்த 10-ஆம் தேதி இரவு உயிரிழந்த இளைஞர் செந்தில்குமார் குஞ்சி பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் குடிபோதையில் வந்து தகராறு செய்தது தெரிய வந்தது.
அப்போது செந்தில்குமாரின் தந்தை கதிர்வேல் மற்றும் 16-வயதான இவரது இளைய மகன் இருவரும் சேர்ந்து செந்தில்குமாரைக் கம்பி கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மயங்கிய நிலையிலிருந்த செந்தில்குமாரை குஞ்சி பாளையம் பகுதியில் உள்ள பாலத்தில் வீசிவிட்டு வாகன விபத்தில் காயம் அடைந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து செந்தில்குமாரின்தந்தை கதிர்வேல், மற்றும் 16-வயதான செந்தில்குமாரின் தம்பியைக் கைது செய்து மேற்கு காவல் நிலைய காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.