கடன் கொடுத்தப்பணத்தை அக்கா வீட்டாரிடம் திருப்பிக்கேட்ட தம்பி; கொடுத்த மறுத்த விரக்தியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியையடுத்த சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி, அக்கா வீட்டாருக்குக் கொடுத்த கடனைத் திருப்பிக்கேட்ட போது கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியையடுத்த சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் பெயிண்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது அக்காவின் கணவரின் அவசரத் தேவைக்காக ரூ.45 ஆயிரத்தை கடனாக கொடுத்திருக்கிறார் நாகராஜ். பல நாட்கள் ஆன நிலையில் இந்தப் பணத்தைத் திருப்பி தராமல் இவரது அக்கா குடும்பத்தினர் அலைக்கழித்து வந்துள்ளனர். இதற்கிடையில் தான் நாகராஜ், தனது அக்கா வீட்டிற்குச் சென்று பணத்தை திருப்பித் தருமாறு வலியுறுத்திய போது, அவர்கள் தர மறுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பெயிண்டர் நாகராஜ் நேற்று மதியம் அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக இதுக்குறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த நாகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பாக அவரை டவரில் இருந்து கீழே இறங்க செய்தனர்ஃ இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...