தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை இன்று துவக்கி வைப்பு: முதன்முறையாக தமிழில் பாடம் நடத்த அனுமதி-அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் பேட்டி.!!

கோவை: தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், முதன்முறையாக இந்த துறைக்குத் தமிழில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் பேட்டி அளித்துள்ளார்.



கோவை: தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், முதன்முறையாக இந்த துறைக்குத் தமிழில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் பேட்டி அளித்துள்ளார்.



கோவை ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் பொறியியல் "கற்க கசடற" என்ற தலைப்பில் தமிழ் மொழியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையினை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று துவக்கி வைத்தார்.

தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அந்த விழாவில் அக்கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துவக்க விழா நிகழ்விற்குப் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், முதன்முறையாக இந்த துறைக்குத் தமிழில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இது ஆங்கில மொழியில் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கும், தமிழில் பாடம் கற்பிக்க எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்த சட்டமன்றம், பேப்பர் இல்லாத சட்டமன்றமாகச் செயல்படுவது அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனவும், அங்குள்ள 3 ஆயிரம் ஊழியர்களுக்கு வரும் 14 ந்தேதி முதல், கணினியிலேயே அனைத்து பணிகளும் மேற்கொள்வது தொடர்பாகப் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...