உடுமலைப்பேட்டையில் தளி எத்தளப்பர் மன்னருக்கு மணிமண்டபம்-செய்தித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.!!

திருப்பூர்: செய்தித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டது


திருப்பூர்: செய்தித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டது.

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபக்கோரிக்கையை நிறைவேற்றும் தமிழகச் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பெற்றது.

இந்த மணி மண்டபத்திற்காக இரண்டு கோடியே அறுபது லட்சம் தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை நிறைவேற்றியதுடன் அதற்காகத் தொகையும் ஒதுக்கி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பெற்றமைக்காக இன்று உடுமலை வந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி எழுதிய திருமூர்த்திமண் நூலும், சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டது.

இந்த இனிய நிகழ்வில் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் தி.குமாரராஜா, துணைத்தலைவர்கள் வி.கே. செல்வராஜ், ராஜாசுந்தரம், செயலாளர் வி. கே.சிவக்குமார், தலைவர்கள் முனைவர் கற்பகவள்ளி, நல்லாசிரியர் விஜயலட்சுமி, இணைச்செயலாளர் ராபின் ஆகியோரும் அமைச்சருக்கு சிறப்பு செய்தனர்.



மேலும், திராவகம் சிதைத்த வாழ்வு எனும் நூலினை முனைவர் ப.கற்பகவள்ளி அமைச்சருக்கு வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...