வால்பாறை: வால்பாறையில் காவல்துறையின் தடையை மீறி ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்தவாரம் ஆற்றில் குளித்த கோவை மருத்துவக்கல்லூரி மாணவர் மாயமான சோக சம்பவம் நடைபெற்றது.
ஆற்றில் மாயமான மாணவரைக் கண்டுபிடிக்க காவல்துறை தீயணைப்புத்துறை வனத்துறை கடலில் மூழ்கித் தேடும் நீச்சல் வீரர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் 10-நாட்களாகத் தேடி மாணவர் கிடைக்கவில்லை.

இதனை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஆறுகளில் குளிக்கத் தடைவிதித்து காவல்துறை சார்பில் கூழாங்கல் ஆற்றில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்குக் கோவை திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா பாண்டிச்சேரியிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக வால்பாறைக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் காவல் துறையின் தடை அறிவிப்பைப் பார்த்தும் தொடர்ந்து ஆற்றில் இறங்கிக் குளித்து வருகின்றனர்.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்தும் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்தும் வருகின்றனர். மீண்டும் உயிர்ப்பலி ஏற்படும் முன் நகராட்சி வருவாய்த்துறை காவல் துறை இணைந்து சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.