கோவை: கோவை மஸ்தூர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

தற்போது நிலவி வரும் கடுமையான பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளர் பிரிவு தலைவர் ஏ.சி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன் விளக்க உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, மக்கள் தொகைக்கு ஏற்ப பத்தாண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சகல வசதிகளுடன் வீடுகளை கட்டிக் கொடுப்பது, பத்தாண்டுகளாக பணியாளர் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு செலக்சன் கிரேடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பரமசிவம், பண்ணாரி, பாபு, ராஜேந்திரன், மணி, ஐயப்பன், சுரேஷ், ராஜமணி, ராணி, பரமேஸ்வரி, ஜோதி உள்ளிட்ட பாரதி மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.