கோவை: வால்பாறையில் தொடர் மழை காரணமாக தேயிலை உற்பத்தி பாதிப்படைந்து உள்ளதால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50.000க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு தினசரி 42 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும், இதற்கு மேல் அதிகப்படியான ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் நான்கு கிடைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூபாய் 150 வரை அதிகப்படியான ஊதியம் பெறுவர்.
ஆனால், தற்போது வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வருவதால் தேயிலை செடியின் கொழுந்து உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது. தற்போது சராசரியாக 20 கிலோ தேயிலை கொழுந்து மட்டும் பறித்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் சராசரியாக ரூபாய் 5000 இழப்பு ஏற்படுகிறது. இதேபோல், தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய குறைவு ஏற்படுவதால் வருவாய் இழப்பீடு காரணமாக தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.