கோவை: கடந்த 2-நாட்களுக்கு முன்பு விவேகானந்தா நகரில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயிலில் புகுந்து திருடிய மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சிங்காநல்லூர் அருகே விவேகானந்தா நகரில் விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலில் இரவு பூஜை முடிந்ததும் தர்மகர்த்தா கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலையில் கோவிலை திறப்பதற்காக வந்தார்.
ஆனால், கோவில் கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோவில் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அம்மன் கழுத்திலிருந்த தங்க சங்கிலி, லட்சுமி உருவம் பொறித்த தங்க காசு, பொட்டுத்தாலி, உட்பட 2-சவரன் தங்க நகைகள் மாயமானது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றி திரிந்த 3-பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் நகைகளை திருடியது உறுதியானது. மேலும் போலீஸ் விசாரணையில் அவர்கள் பெரியகுளத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், விஜய், மற்றும் மாரிராஜன் என்பது தெரியவந்தது. அவர்களை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.