திருப்பூர்: தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வினீத் துவக்கி வைத்தார்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஒரு சிறப்புத் தலைப்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் செப்டம்பர் 2021-மாதத்தில் “ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்” என்ற தலைப்பில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிதல் "வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல்" என்ற இரு கருத்துகளை கொண்டு ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஏற்பாடு செய்யப்பட்ட ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் வினீத் துவங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில், பாரம்பரிய சிறுதானியங்கள் கொண்டு 50-உணவு வகைகள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இணை உணவு மாவு கொண்டு செய்யப்பட்ட 50-உணவு வகைகள் என மொத்தம் 100-உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பாரம்பரிய உணவு வகைகளுக்கான செயல்முறை கையேடு மற்றும் ஊட்டச்சத்து நிலைக்கு வாழ்க்கை சுழற்சி அணுகுமுறை குறித்த துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.