கோவை: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. 3 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. பாலக்காடு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதனால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி, சோலையார் அணை 161.29 அடியை எட்டியுள்ளது.

ஆழியார் அணை 118.95 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில், 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,352 கன அடியாக உயர்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

இதனைத்தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில், மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதகுகள் வழியாகவும், காண்டூர் கால்வாய் வழியாகவும், விநாடிக்கு 2,085 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள கரையோர கிராமங்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.