கோவையில் மது மற்றும் புகையிலை விற்ற 28 பேர் ஒரே நாளில் கைது.

கோவை: கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 28 பேர் மது மற்றும் புகையிலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டதில், 28 பேர் மது மற்றும் புகையிலையை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததற்காகது கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 21 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 186 மது பாட்டில்கள் மற்றும் 45 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதே போல், கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.18 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 770810100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும், என்று உறுதியளித்துள்ளார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...