திருப்பூர்: சமையல் காஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டரை பாடை கட்டி எடுத்து வந்தும், விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை அனுசரித்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு இருமுறை சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருகின்றன.
அந்த வகையில் கடந்த 1-ந் தேதி சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.900-ஐ தாண்டி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டு ரூ.410-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் தற்போது 7 ஆண்டுகளில் 125 சதவீதம் விலை உயர்ந்து ரூ.900-ஐ தாண்டி உள்ளது. மானியமும் பெயரளவில் தான் உள்ளது. இதனால் சாமானிய, நடுத்தர மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் சமையல் கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி சிலிண்டரை பாடைகட்டி எடுத்து வந்து விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.